KodaiMercury

ஜஸ்டிஸ் ராக்ஸின் அன்மேக்கிங் இந்தியா இசை நிகழ்ச்சியை வழங்காதவர்களாக யுனிலிவர் அறிவிப்பு

கார்ப்பரேட்டுகளை கொஞ்சும் இந்திய அரசின் மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை விமர்சிக்கும் வகையில், இந்த வருடம் நடை பெறவிருக்கும் ஜஸ்டிஸ் ராக்ஸின் இசை நிகழ்விற்கு அன் மேக்கிங் இந்தியா என்கிற பொருளை தேர்ந்தெடுத்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று. நிகழ்ச்சியை வழங்காதவர்களாக பாதரச மாசு புகழ் யுனிலிவரையும் இந்திய அரசையும் அந்த குழு அறிவித்திருக்கிறது. அக்டோபர் 3ந் தேதி பெசண்ட் நகர் கடற்கரைக்கு எதிரில் இருக்கும் ஸ்பேசசில் மாலை ஆறு மணி முதல் இசை நிகழ்வு நடைபெறும்.  விளம்பரதாரர்களின் ஆதரவு இல்லாத, உரிமைகள் கோரப்படாத ஜஸ்டிஸ் ராக்ஸ் என்கிற நிகழ்வு, சமூக/சுற்றுசூழல் பிரச்னைகள் மீது இசை மற்றும் கலைகளின் மூலம் கவனத்தை கோரும் இளைஞர்களுக்கு மேடை அமைத்து தருகிறது. நிதி தருபவர்களை புகழும் கலைஞர்கள் பங்கு பெறும் விளம்பரதாரர் நிகழ்வு போல் ல்லாமல், ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வில் இளம் கலைஞர்கள் நிகழ்ச்சியை வழங்காதவர்களை கிண்டல் செய்தும் விமர்சனம் செய்தும் பாடல்களையும் கலை நிகழ்ச்சிகளையும் வழங்குவார்கள்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, ஒரு விருது நிகழ்வும் நடத்தப்பட்டு அதில் இரண்டு குரங்குகள் என்கிற விருது யுனிலிவரின் தலைமை செயல் இயக்குனர் பால் போல்மெனுக்கு வழங்கவிருக்கிறது. கொடைக்கானல் மாசு பிரச்னையில் தனது நிறுவனத்துக்கு இருக்கும் பொறுப்பை பிடிவாதமாக மறுத்துவரும் போல்மேனுக்கு அங்கீகாரமாக இந்த விருது அமையும்.

”மேக் இன் இந்தியா பிரச்சாரத்தில் உள்ள ஆபத்துகளை சொல்ல வேண்டுமென்றால் அதற்கு கொடைக்கானலில் யுனிலீவரின் பாதரச மாசு தவிர வேறு உதாரணம் தேவை இல்லை” என்கிறார் 28 வயதான ராப்பர் சோஃபியா அஷ்ரஃப். கொடைக்கானல் வோண்ட் என்கிற ராப் பாடல் மூலம் பிரபலமடைந்தவர் அவர். “யுனிலிவரின் மேக் இன் இந்திய திட்டம் சுத்தமான குடிநீரை உருவாக்கும் நீர்க்காடுகளின் தன்மையை மாற்றிவிட்டது என்பதுதான் உண்மை” என்கிறார் அவர். ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்று வரும் அஷ்ரஃபின் குழு ”மல்லிப்பூ மற்றும் அல்வா” குழு இந்த வருடமும் நிகழ்வில் பங்கேற்று முதல் பாடலையும் பாடவிருக்கிறார்கள்.

“அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா திட்டம் எல்லாம் நமது சூழல் மற்றும் தொழில் பாதுகாப்பு முறைகளில் சமரசம் செய்யும் பெரிய துறைமுகங்கள், பெரிய அணைகள், மின் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகள் பற்றியவைதான். கொடைக்கானல் மற்றும் போபால்களை உருவாக்குபவை அவை” என்கிறார் 2010லிருந்து ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வில் பங்கேற்று வரும் 24 வயது அர்ச்சனா சேகர். “இந்திய அரசின் திட்டம் வாழ்வதற்கான் முறையை அகற்றி வணிகத்துக்கான முறையை கொண்டு வந்து இந்தியாவை நாசப்படுத்தும் திட்டம்” என்கிறார் அவர்.

மேக் இன் இந்தியா பல பேருக்கு பல விஷயங்களாக இருக்கும். தமக்கும் மேக் இன் இந்தியா பற்றிய ஒரு பார்வை இருப்பதாக சொல்கிறார்கள் ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வு அமைப்பாளர்கள். “உண்மையில், நாங்கள் நம்பும் மேக் இன் இந்தியா உயர்ந்த விழுமியங்கள் கொண்டது. சொல்லப்போனால் நாங்கள் இந்தியாவுக்கு உருவாக்க விரும்புகிறோம். சுத்தமான நீரை, காற்றை, உணவை உருவாக்க விரும்புகிறோம். நமக்கும் நமது பிந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்து அதை உருவாக்ககூடிய இந்த மண்ணின் தன்மையை மாற்றாத ஒரு மேக் இன் இந்தியாதான் நமக்கு உண்மையில் வேண்டும்” என்கிறார் சென்னையை சேர்ந்த இசை கலைஞர் விஷ்ணு ராம்பிரசாத். தனது குழுவான விஷ்ணு ஆர் இணைப்பின் மூலம் அவர் நிகழ்வில் பங்கு கொள்வார்.

உயர் பள்ளிகளை சேர்ந்த குழுக்கள் உள்படை ஐந்து இசைக்குழுக்கள் நிகழ்வில் பங்கு பெறும். குரங்கன் (தமிழ்), சித் ஹன்டே மற்றும் தி டிராமா  உள்ளிட்ட குழுக்களும் பார்கவ் பிரசாத், ஷ்யாம் ரங்கநாதன் போன்ற நகைச்சுவையாளர்களும் அறிமுக கலைஞர்களான ஹரிஷ், கோகுல், கிருஷ்ணகுமார் ஆகியோரும் அதில் பங்கு பெறுவார்கள்.

குறைந்த முதலீடு, மிதமான ஒலி, அதிக பொழுது போக்கை கொண்டதாக ஜஸ்டிஸ் ராக்ஸ் நிகழ்வு அமையும். கடந்த வருடங்களில் யூனியன் கார்பைட் மற்றும் டௌ கெமிக்கல்ஸ் வழங்காத Don’t Work for Dirty Dow, யுனிலிவெர் வழங்காத Lever Fever, அணுசக்தி துறை வழங்காத Unclear Energy (அணுசக்தி பற்றி), கலாச்சார காவலர்கள் மற்றும் அடிப்படைவாதிகள் வழங்காத Culture Unplugged, தமிழக மின் துறை வழங்காத Leaky Bucket(ஓட்டை வாளி மின் பிரச்னை பற்றி) போன்ற நிகழ்வுகளை ஜஸ்டிஸ் ராக்ஸ் நடத்தியிருக்கிறது. அனுமதி இலவசம்.

 

மேலதிக தகவல்களுக்கு

அர்ச்சனா சேகர்: 9840523235

சோஃபியா அஷ்ரஃப்: 9840987186

விஷ்ணு ராம்பிரசாத்: 9940156668