KodaiMercury

Press Release: Unilever’s Proposed Cleanup Not Ecologically Acceptable (Tamil)

சூழலியல் தேவைகள் கோரும்  கண்டிப்பான நியமங்களைப் பின்பற்றி கொடைக்கானலில் பாதரச மாசை சுத்தம் செய்ய யூனிலிவர் முன்வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் திலீப் பொரல்கர், கிளாட் ஆல்வாரெஸ் உள்ளிட்ட  விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு  பொரல்கர் மற்றும் ஆல்வாரெஸ்   எழுதிய கடிதத்தை வெளியிட்டு பேசிய சென்னையை சேர்ந்த பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயிலும்  டி.சுவாமினாதனும் இயற்கை உற்பத்தி அளவான 0.1 மில்லிகிராம்/கிலோகிராம் அல்லது அதற்கு மிக அருகில் வரக்கூடிய சுத்தப்ப்டுத்துவதற்கான நியமங்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தற்போது யூனிலிவர் முன் வித்திருக்கும் 20மில்லிகிராம்/கிலோகிராம் என்கிற அளவு,  நீர்த்தேக்க காடுகள் மற்றும் அதில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்புக்கு தேவையான அளவை விட 200 மடங்கு அதிகம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

யூனிலிவரின் தெர்மோமீட்டர் தொழிற்சாலை இயங்கி வந்த18 ஆண்டுகளாக ஏற்பட்ட மாசையும் சூழ்ல்கேட்டையும் சரி செய்ய ஒரு விரிவான செயல்திட்டத்தை ஆகஸ்ட் 10ந் தேதி முன் வைத்தது அந்த நிறுவனம். பொது மக்களின் கோரிக்கையை ஏற்றும் உச்சநீதிமன்ற கண்காணிப்பு குழுவின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டும் பத்து வருடங்களில் முதன் முறையாக உள்ளூர் குழு கூட்டத்தை ஆகஸ்ட் 28ந் தேதி என்று கூட்டியிருக்கிறது தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம். அந்த கூட்டத்தில் யூனிலிவர் முன் வைத்திருக்கும் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

“எதிர்கால பயனாளிகளை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அவர்களை பாதுகாக்கும் பொருட்டு மட்டும் சுத்தத்திற்கான நியமத்தை வகுப்பது, அறிவியல்பூர்வமானது அல்ல. இந்த பகுதி பாம்பர் சோழர்  சூழல் மண்டலத்தில் இன்றியமையாத ஒரு பகுதி.  மண்ணில் வாழும் நுண்ணுயிர்களாலேயே இந்த சூழல் மண்டலம் வளமாக இருக்கிறது. இந்த நுண்ணுயிர்கள் பாதரசம் போன்ற நச்சுக்களால் கடுமையான பாதிப்பை சந்திக்கக்கூடியவை. இந்த சிறப்பு சூழல் மண்டலத்தின் முழு நலனை காக்கும் முழுமையான அதற்கேற்ற அளவுகளைக் கொண்ட  சுத்தபடுத்துதல் இருக்க வேண்டும்” என்று சொல்கிறார் மண் வள வல்லுனரும் புதிய கல்லூரியின் உயிரியல் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் தலைவருமான சுல்தான் இஸ்மாயில்.”ஒரு கிலோ மண்ணில் 20 மில்லிகிராம் பாதரசத்தை விட்டுவைத்தால் அது சுத்தப்படுத்துதலுக்கு பிறகும் காடுகளையும் காட்டுயிர்களையும் பாதிக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

“பாதரசம் அந்த பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு கவலைப்பட வேண்டிய அளவுக்கு பரவாமல் தடுப்பதற்காகவே சுத்தப்படுத்துதலை முறையாக செய்ய வேண்டும் என்பது வழக்கமான ஒரு நடைமுறை. ஆனால் இப்போது யூனிலிவர் முன் வைத்திருக்கும் செயல் திட்டம் அதை செய்யவில்லை. அதனால் சுத்தப்படுத்துதலுக்கு பிறகும் கூட பாதரசம் பரவி வைகையில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்கிறார் ஐஐடி சென்னையின் ஓய்வுப்பெற்ற  வேதியியல் பொறியாளர் பேராசிரியர் சுவாமினாதன். மதுரை, திண்டுக்கல், தேனி, பெரியக்குளம் மற்றும் பழனியைச் சேர்ந்த மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் அவர்

”சூழல் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை சுத்தப்படுத்தும் விஷயங்களில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதை உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறது” என்றார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.வெற்றி செல்வன்.

 

ஏற்பாடு: பாதரசத்துக்கு எதிரான தமிழ்நாடு கூட்டணி

92, 3வது குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர், பெசண்ட் நகர், சென்னை 90

 

மேலதிக தகவல்களுக்கு

நித்தியானந்த் ஜெயராமன், சென்னை ஒருங்கிணைப்புக்குழு : 9444082401

வழக்கறிஞர் மு.வெற்றி செல்வன், பூவுலகின் நண்பர்கள்: 9443416986

 

பார்க்க:
kodaimercury.org
jhatkaa.org/unilever